what-they-told

img

இலவசம் என்றாலும் தடையின்றி ஒளிபரப்பு செய்யும் ஹாட் ஸ்டார்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற் றுள்ளது. அதன்படி தொலைக்காட்சி யில் (கேபிள், டிஷ்) ஸ்டார் ஸ்போர் ட்ஸ் மொழி மற்றும் எண் வரிசைக ளும், ஆன்லைன் பிளாட்பார்மில் (ஓடிடி) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவ னத்தின் ஹாட் ஸ்டார் டிஸ்னி பிளஸ் (Hotstar Disney +) நிறுவனமும் இலவசமாக (ஸ்மார்ட்போனில் மட்டும் - ஸ்மார்ட் டிவிக்களில் இல்லை) ஒளிபரப்பு செய்கிறது

ஜியோ ஏற்படுத்திய பீதி

2022இல் கத்தார் நாட்டில் நடை பெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரை மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஓடிடி பிரிவான ஜியோ சினிமா (JIO CINIMA) இந்தியாவில் இலவசமாக ஒளிபரப்பு செய்தது. கத்தார் உலகக்கோப்பை தொடரின் 64 ஆட்டங்களும் சிக்னல் தடை யோடுதான் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இதனால் கால்பந்து ரசி கர்கள் எரிச்சலுடன் உலகக்கோப்பை தொடரை ரசித்தனர்.  மேலும் டுவிட்டர் பக்கத்தில் ஆயி ரக்கணக்கான ரசிகர்கள் ஜியோ சினிமாவின் அதிகாரப்பூர்வ பக்கத் தில் புகார் அளித்தனர். நாள்தோறும் புகார் அளிக்க, ஒவ்வொரு முறையும்  ஜியோ சினிமா விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது.  கிட்டத்தட்ட இந்திய விளை யாட்டு ரசிகர்கள் கால்பந்து விளை யாட்டை வெறுக்கும் அளவிற்கு அம்பானியின் ஜியோ சினிமா ஒரு மெகா சம்பவத்தை செய்தது. ஜியோ சினிமா போன்று ஹாட் ஸ்டார் நிறு வனமும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இலவச அறிவிப்பை வெளியிட்டது. ஹாட் ஸ்டாரில் அனைத்து அம்சங்களும் இருப்ப தால் அனைத்து தரப்பினரும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசி கர்கள் சந்தா கட்டணம் செலுத்திய வர்கள் ஏராளம். ஆனால் ஜியோ சினிமா சம்பவம் போன்று ஆகிவிடு மோ என அஞ்சினர்.

சிக்னல் தடை  எதுவும் இல்லை

ஆனால் ஹாட் ஸ்டார் நிறுவனம் இதுவரை நடைபெற்ற 9 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் சிறிய சிக்னல் பிரச்சனை கூட ஏற்படாமல் தங்குதடையின்றி ஒளிபரப்பு செய்துள்ளது.  இதனால் ஹாட் ஸ்டார் சந்தா தாரர்கள் மற்றும் ஸ்மார்ட்போனில் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியுடன் உலகக்கோப்பை தொடரை ரசித்து வருகின்றனர்.