what-they-told

img

குடியரசு தினம்: அணிவகுப்பில் இடம் பெற்ற கோவை பாட்டி

மேட்டுப்பாளையம், ஜன.27- தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட் டின் அலங்கார ஊர்தியில், இயற்கை விவசாயி ரங்கம்மாள் பாட்டி சிலை இடம் பெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டம் தேக்கம்பட்டி என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்த வர் 107 வயதான பாப்பம்மாள் என்ற ழைக்கப்படும் ரங்கம்மாள் பாட்டி. பெண் விவசாயியான இவர் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக (தனது 101 ஆவது வயது வரை நேரிடையாக தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை மேற் கொண்டார்) தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறை விவ சாயத்தை மேற்கொண்டதோடு பல ருக்கும் இயற்கை முறை விவசாயத் தின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஊக்குவித்தார். இதற்காக தள்ளாத வயதிலும் தமிழகத்தின் பல்வேறு பகு திகளுக்கு மட்டுமின்றி நாடு முழுவ தும் பல மாநிலங்களுக்கும் பய ணித்து இயற்கை விவசாய முறை யினை விவசாயிகளுக்கு கற்று தந் தார். இப்பணிக்காக பாப்பம்மாள் பாட் டிக்கு பாராட்டுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு சார்பில் இவருக்கு  பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக் கப்பட்டது. அப்போதைய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கிய விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி  பெற்றார். இந்நிலையில், தற்போது தில்லியில் நடைபெற்ற 74 வது குடி யரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார வாகனத்தில் பெண்ணின் பெருமை  போற்றும் வகையில் பாப்பம்மாள் பாட்டியின் உருவம் சிலை வடிவில் இடம் பெற்றது. இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்ற மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாட்டி, இதற்காக ஒன் றிய, மாநில அரசுகளுக்கு பாப்பம் மாள் பாட்டி நன்றி தெரிவித்து கொண்டார்.

;