what-they-told

img

பெரியகுளம் அருகே வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை புலி அடித்துக்கொலை

தேனி ,செப்.30-  பெரியகுளம் அருகே வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை புலி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . பெரியகுளம் அருகே வரட்டாறு வனப்பகுதியில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்டது. இதனை காப்பாற்ற சென்ற உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் சிறுத்தை புலியை தனது செல்பேசி மூலம் படம் பிடித்துள்ளார் .அப்போது வெகுண்ட  சிறுத்தை தாக்கியதில்  உதவி வனப்பாதுகாவலர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் செப்டம்பர் 28 ஆம் தேதி   சிறுத்தை கம்பியில் சிக்கி, இறந்து கிடந்ததாக  உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், தேனி வனச்சரக அலுவலர் ஆனந்த பிரபு மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுத்தையை உடற்கூராய்வு செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரித்து  வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை நாட்டில் சிறுத்தை எண்ணிக்கை குறைந்த நிலையில், பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டிலிருந்து 7 சிறுத்தைகளை கொண்டு வந்து விழா கொண்டாடி வரும் நிலையில் சிறுத்தை தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.அதுவும் இறந்த சிறுத்தை அதிகாரியை தாக்கியது இல்லை .அது வேறு என்கிறார்கள். அது ஏற்புடையது அல்ல . வனத்துறையினர் இறந்த வன விலங்குகளை உடற்கூராய்வு செய்ய உள்ளூர் கால்நடை மருத்துவ அலுவலர்களை பயன்படுத்தி வருகிறார்கள் .தேனியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது .அதில் உள்ள மருத்துவ நிபுணர்களையும் இணைத்து உடற்கூராய்வு செய்தால் உண்மையை கண்டறிய வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

;