what-they-told

img

கும்பகோணம் துக்காச்சி கோவிலில் 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

கும்பகோணம், மே 27- கும்பகோணம் அருகே உள்ள துக்காச்சி கிராமத்தில் சௌந்தர்யநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவி லில் நடைபெற்று வரும் குடமுழுக்கு பணியின் போது, கி.பி. 12ஆம் நூற் றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டது.  இதுகுறித்து கும்பகோ ணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனரும், செயலாளருமான கும்ப கோணம் ஆ.கோபிநாத் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.  அப்போது அவர் கூறு கையில், ‘‘தஞ்சாவூர் மாவட் டம் கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வ ரர் கோவிலில் தற்போது குட முழுக்குப் பணி நடைபெற்று வருகிறது. இக்கோயிலு க்குக் களப்பணி சென்ற போது இரண்டாம் ராஜகோபு ரத்தின் வாயிற்படியில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணமுடிந்தது. இதில் இவ்வூரின் தொன்மையை பறைசாற்றும் வாசகம் இடம்பெற்றுள்ளது.  கல்வெட்டில் ‘குலோத் துங்க சோழநல்லூர்’, ‘தென் திருக்காளத்தி மகாதேவர்’, ‘விஜயராஜேந்திர சதுர்வேதி மங்களம்’ என்ற முக்கிய சொற்றொடர்கள் உள்ளன. இதன் மூலமாக முதலாம் குலோத்துங்க சோழனின் 30-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1100) குலோத்துங்க சோழ நல்லூரில் இருந்து தென்திருக்காளத்தி மஹா தேவர் கோவிலில் திருப்பதி கம் (தேவாரம்) பாட உய்யக் கொண்டார் வளநாட்டை சேர்ந்த திருநறையூர் நாட்டு விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலத்து (துக்காச்சி) ஊர் சபையோர் நிலம் தானம் அளித்த செய்தியை இக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் துக்காச்சியின் ஒரு பகுதியும்,  அருகிலுள்ள கூகூர் கிராமத்தின் ஒரு பகுதியும் இணைந்து ‘குலோத்துங்க சோழ நல்லூர்’ என்ற பெய ரில் இருந்துள்ளது. இந்த  பகுதியில்தான் ‘தென்திருக் காளத்தி மஹாதேவர் கோவில்’ இருந்துள்ளது என் பதற்கும் இந்த கல்வெட்டே சான்றாகும். இத்தகைய பெருமை வாய்ந்த கல்வெட்டானது பாதுகாப்பு கருதி ஊர் மக்களின் துணையுடன் கோவிலின் மகா மண்ட பத்தில் தற்போது வைக்கப் பட்டுள்ளது.  குடமுழுக்கின்போது அனைவரும் கண்டு அறியும் வண்ணம் திருச்சுற்று மாளி கைப்பகுதியில் வைக்க வேண்டும் என பணிக்குழு விடம் தெரிவிக்கப் பட்டுள்ளது’’ என தெரி வித்தார். கல்வெட்டினை படியெ டுக்கும்போது சங்கத்தின் களஆய்வுக்குழு உறுப்பி னர்களான திலீபன், சுந்தர் ராஜ், விஷால், சுரேஷ் குமார் மற்றும் துக்காச்சி கிராமவாசிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

;