what-they-told

img

காலத்தை வென்றவர்கள் என்றும் வழிகாட்டும் ஜீவா...

“கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத் தின் ரூபமடா” எனும் கவிதை   காலத் தால் அழியாமல் ஜீவாவை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் எனின் மிகையன்று. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யின் முக்கியத் தலைவராக விளங்கிய பொதுவுடமைப் போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைத் தண்டனைகளையும் சோதனைகளை யும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதி யாக, சுயமரியாதை  இயக்கப் பற்றா ளராக, இலக்கியவாதியாக பொதுவு டமை இயக்கத் தலைவராக செய லாற்றியவர். 1952- ம் ஆண்டு வண்ணாரப் பேட்டை தொகுதியில் இருந்து சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொது மக்களைக் கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்ட னர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவ ராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்ட மன்றத்தில் நிகழ்த்திய உரை “சட்டப் பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது. இவரது நினைவாக கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரி யில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.

ஜீவாவின் மறைவு குறித்து கே.பி.ஜானகியம்மாள்.....
“ஜீவா அவர்கள் மறைவின்போது நானும் பொன்மலை பாப்பாவும் வேலூர் சிறையில் இருந்தோம். 19.01.1963 அன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டோம். வெளிவந்த பின்னர் தான் ஜீவாவின் மறைவுச் செய்தியைப் படித்தோம்.செய்தி எங்களை திக் பிரம்மையடையச் செய்தது. கால்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடிய வில்லை. கண்ணீர் விட்டோம். இறுதி யாத்திரைக்குச் சென்றுவிடலாம் என்று துடித்தோம். இரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டாண்டிற்கும் அலைந்தோம்.குறித்த நேரத்தில் போய்ச் சேரும்படியான போக்கு வரத்துகிடைக்காத காரணத்தால் ஜீவா முகத்தைக் காணக் கிடைக்கவில்லை.  சென்னைக்கும்செல்ல வழி யில்லை.மதுரைக்கும் வர மன மில்லை.என்னைப் பொதுவாழ்வில் பங்கேற்க வைத்த தியாகச் சுடரை இறுதி முறையாகக் காணும் வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை.  கண்கள் கலங்கினர். அவரது அரும்பெரும் சேவைகள் இதயத் திரையில் உருண்டோடி வந்தன. என்னைப்பொறுத்தவரையில் ஜீவா மறைந்தார் என்று எண்ணவில்லை. என்று எண்ணவும் மாட்டேன். அவர் என்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டுதானிருக்கிறார்”

(ஜீவா பிறந்த நாள் ஆகஸ்ட் 21) .. பெரணமல்லூர் சேகரன்

;