கனடா ஆய்வாளர்கள் கணிப்பு
டொரண்டோ, மே 9- கடுமையான வெயில், ஈரப்பதமான சூழல் ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. பொதுச் சுகாதார நட வடிக்கைகள், பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களை மூடிவைப்பதன் மூலமே கொரோனா வைரஸ் பரவு வதைத் தடுக்க முடியும் என்று கனடா ஆய்வா ளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடா மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை வெளியாகி யுள்ளது. கனடாவில் உள்ள புனித மைக்கேல் மருத்துவமனை, டொரண்டோ பல்கலைக்கழ கத்தின் பேராசிரியர் பீட்டர் ஜூனி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெ ரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள 144 இடங்களில் ஆய்வு செய்யப் பட்டது. அங்கு 3,75,600 கொரோனா நோயாளி களின் உடல்நிலையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து பேரராசிரியர் பீட்டர் ஜூனி கூறுகையில், எங்களின் ஆய்வில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த முக்கியத் தகவலைக் கண்டுபிடித்தோம். கொரோனா வைரஸ் பர வலை வெயில், ஈரப்பதமான சூழல் கட்டுப்படுத்தும் என்ற தகவலை நாங்கள் ஆய்வின் மூலம் மறுக்கி றோம். வெயில், ஈரப்பதமான காலநிலையால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுச் சுகாதாரத்தின் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும் என்றார்.