india

img

கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.... பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்....

பெங்களூரு:
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில் பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

‘இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நிர்வாக அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். இதற்கான அதிகாரத்தைஅந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்க வேண்டும்.கொரோனா தடுப்பு விஷயத்தில், மத்திய - மாநில அரசுகளின்கவனம் முழுவதும் பெரிய நகரங்கள் மீதே உள்ளது. இதனால் சிறிய நகரங்கள், தாலுகா தலைநகரங்களில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கிராமங்களில் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. இதன் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசிடம் தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பு இருந்தால்,பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு நிர்ணயம் செய்யலாம். தடுப்பூசி விரைவாகசென்றடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பொறுப்பு வழங்க வேண்டும்.தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ள விலை குறித்து அதிகளவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விலை நிர்ணயிக்கும்போது ஏழை மக்களைநினைவில் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்தால், அது மிகப்பெரிய மனிதநேய செயலாக இருக்கும். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.ஏழைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விஷயத்தில் அடையாள அட்டையை கேட்பது போன்ற அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். படிப்பறிவற்ற ஏழை மக்களுக்கு, இணையதளத்தில் எவ்வாறு தங்களின் பெயர் விவரங் களை பதிவு செய்வது என்பது தெரியாது. இது அந்த மக்களுக்கு தடையாக அமைந்து விடக்கூடாது.

அரசு துறைகளில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சம்பளத்துடன் 3 மாதங்கள் விடுமுறை வழங்கவேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு மேல் படிப்புக்கான நுழைவு தேர்வில்ஊக்க மதிப்பெண் வழங்க வேண் டும். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ ஊழியர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.அனைத்து நோக்கத்திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒருஇடத்தில் கூடுவதை தடை செய்ய வேண்டும். வட இந்தியாவில் ஒன்று,தென்னிந்தியாவில் ஒன்று என அனைத்து வசதிகளுடன் கூடிய 2 தடுப்பூசி உற்பத்தி மையங்களை ஏற்படுத்த வேண்டும்’ என்று தேவகவுடா குறிப்பிட்டுள்ளார்.