what-they-told

img

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள்

சென்னை,பிப்.21- செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 2 ஆசிரியர்களின் விடுதலையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம்  நடத்திய நாகராஜ், புகழேந்தி ஆகிய இரு ஆசிரியர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. செல்போனில் ஆபாச படங்களை காண்பிப்பது, பாலியல்  சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இவர்கள் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பாதிக்  கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு, அந்த ஆசிரியர்களை விடுதலை  செய்தது. போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத் தோடு இந்த புகார்கள் அளித்துள்ள தாகவும் தீர்ப்பில் நீதிபதி  கூறியிருந்தார்.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவி யின் பெற்றோர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை  நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். சாட்சிகளின் வாக்கு மூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்தும்,  இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கில் ஆசிரியர்கள் இருவருக்கும் எதிராக  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி  நிரூபிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார். இரு ஆசிரியர்களால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். ஆனால், ஆதாரம் இல்லை என்று கீழ் கோர்ட்டு அந்த இரு  ஆசிரியர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஆசிரியர்கள் இருவரும் குற்ற வாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை  வழங்குவதற்காக இருவரும் வருகிற 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.