what-they-told

img

பசு மாட்டுச் சாணம், சிறுநீர் தொடர்பான தொழில்தொடங்குவோருக்கு நிதி உதவியாம்!

புதுதில்லி, செப். 9 - பசு மாட்டுச் சாணம், சிறுநீர் தொடர்பாக தொழில் தொடங்கு வோருக்கு 60 விழுக்காடு வரை நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பால் பொருட்களைத் தவிர்த்து, பசு மாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அதன் ஒரு பகுதியாக வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பசு மாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை ‘மருத்துவம்’ மற்றும் விவசாயத்திற்கு பயன்படுவ தால் அவை தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 விழுக்காடு நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். பசு மாட்டின் கழிவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உதவிகள் செய்யப்படும் என்றும், ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் கோசாலைகளில், பசு வளர்ப்போருக்கும், உரிமையாளர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் வல்லாப் கத்திரியா கூறியுள்ளார்.