what-they-told

img

கல்வி நிலையங்களில் பாலியல் குறித்த

மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை,டிச.15 –  பாலியல் குற்றங்களை தடுக்க கல்வி நிலையங்களில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண் டும் என மாணவர் சங்க மேட்டுபாளை யம் தாலுகா மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  இந்திய மாணவர் சங்கத்தின்  கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யம் தாலுகா மாநாடு சனியன்று நடைபெற்றது. சிடிசி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டை சங்கத்தின் மாவட்ட தலைவர் அசார் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில மாணவிகள் உபக்குழு கன்வீனர் காவியா, மாவட்டக்குழு உறுப்பினர் நர்மதா ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். முன்னதாக, மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அரசு பள்ளி களை பாதுகாத்து அதன் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண் டும். மேட்டுப்பாளையம் பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து  உயிரிழந்த மக்களுக்கு இழப்பீ டுகள் முறையாக வழங்க வேண் டும். நீதி கேட்டு போராடியவர் கள் மீது போடப்பட்ட பொய் வழக் குகளை திரும்ப பெற வேண் டும். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வி குறித்து கற்பிக்க  வேண் டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதா திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற் றப்பட்டது. இம்மாநாட்டில் மேட்டுப் பாளையம் தாலுகா தலைவராக மு.தினேஷ், செயலாளராக ஆகாஷ்  மற்றும் 29 பேர் கொண்ட தாலுகா குழு அமைக்கப்பட்டது.