சென்னை, ஆக.27- ஐநா.மனித உரிமை ஆணையக் கூட்டத் தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஜெனீவாவில் வரும் செப்டம் பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள மனித உரி மைகள் ஆணையக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற் கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.