what-they-told

img

மரத்தைக் காணவில்லை: பொதுமக்கள் புகார்

அவிநாசி, ஜூலை 5- அவிநாசி ஒன்றியங் களில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்பட்டதாக அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பட்ட மரங்களை காணவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித் துள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித்  திட்டத்தின் கீழ் கிராமப் புற பகுதி சாலையோரங்களில் மரக் கன்று நடுவதற்காக ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இம்மரங்கள் நடும் பணி 5.10.2017 அன்று துவங்கி 5.11.2017 முடிவடைந்துள்ளது. இதில்  மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி யாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.207 வழங் கப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, மரக்கன்று நடுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி யாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும்  மரக்கன்றை பராமரிப்பது ஊராட்சி நிர்வாகத்தின் பணியாகும். இந்த மரக் கன்றுகளை ஆறு மாதம் வரை பராமரிக்கப் படும். அதன் பின் இயற்கை மூலமாக  தானாக வளரும் எனத் தெரிவித்தார்.  இந்நிலையில் பொதுமக்கள் கூறு கையில், கிராமப் பகுதியில் மரக்கன்று நட்டதற்கான அடையாளம் தெரிய வில்லை. ஆனால் சில ஊராட்சி பகுதிகளில் குறைந்தளவு மரக்கன்று நடப்பட்டுள்ளது. இம்மரங்களை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பு செய்யவில்லை. ஆனால் அறிவிப்பு பலகை மட்டும் வைத்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.