திருநெல்வேலி, நவ.23- திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் விவசாயத் தொழிலாளர்கள் மட்டு மின்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் நடவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் முழு வதும் பெய்த மழையால் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள் ளது. நெல் நாற்றுகளை நாற்றங் கால்களில் இருந்து எடுத்துச் சென்று நடவுப் பணிகள் நடைபெற்று வரு கிறது. மாவட்டத்தில் உள்ள அணை களில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாலும், தொடர் மழையாலும் இந்தாண்டு தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் விவசாயிகள். கடந்தாண்டு, விவசாயிகள் விவசாயப் பணிகளுக்காக உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களை பயன்படுத்தியுள்ளனர். நபர் ஒரு வருக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலி வழங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு, உள்ளூர்த் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துள்ளதாகக் கூறுகின்றனர். கொல்கத்தாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான பி. கார்த்திக் கூறுகையில், “தாம் சொந்த ஊரில் இருந்தபோது நெல் நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பல தொழில்களைக் கற்றுக்கொண் டேன். இருப்பினும் நாங்கள் செங்கல் சூளையில் வேலை செய்வதற் காகத்தான் வந்தோம். கனமழை காரணமாக சூளைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனவே எங்களுக்குத் தெரிந்த வேலையை செய்து வருகிறோம்” என்றார். மற்றொரு புலம்பெயர் தொழிலாளியான சுகுமார் கூறுகை யில், “ சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் இங்கு வர நேரிட் டது என்றார்”. இவர் தற்போது சீவலப்பேரியில் பணியாற்றி வருகிறார். புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், “ புலம் பெயர் தொழிலாளர்கள் நாற்று நடு கின்றனர். தினக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். அவர்களுக்கு தேநீர், தின்பண்டங்கள், போக்குவரத்துக் கட்டணம் சேர்த்து ரூ.500 கொடுக்க வேண்டும் என்றார்.