சென்னை,மார்ச் 3- பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் தமிழ் மொழிப்பாடம் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எளிதாக இருந்த தாக மாணவர்கள் தெரிவித்த நிலை யில் 11 மாணவர்கள் காப்பி அடித்து சிக்கியுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ‘பிட்’ அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் பழைய பாட திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள். சென் னையை சேர்ந்த 7 பேரும், வேலூர் மா
பிடிபட்ட 11 மாணவர்களும் தேர்வு எழுதும் அறையிலிருந்து வெளியேற் றப்பட்டனர். பறக்கும் படையினர் கல்வி அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்த னர். காப்பி அடித்து தேர்வு எழுதினாலோ, துண்டுச் சீட்டு வைத்து இருந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறது. பிடிபட்ட 11 பேரும் காப்பி அடித்ததால் 3 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதோடு தேர்வு எழுத முடியாது.வட் டத்தை சேர்ந்த 4 பேரும் சிக்கினர்.