அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
நாகப்பட்டினம், மே 30- நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு மே 27-ஆம் தேதி நாகூரைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய ஒரு வர் வந்துள்ளார். தமக்கு குடல் சம்பந்தமாக பிரச்சனை இருப்ப தாகக் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே எடுத்துவரு மாறு கூறியிருக்கின்றனர். பின்னர் அவரது எக்ஸ்ரேயை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவ ரது பெருங்குடலில் 250 மி.லி கொள்ளளவு கொண்ட கண் ணாடி பாட்டில் இருந்ததுதான்.
நாகப்பட்டினம் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பண்டியராஜ் கூறுகை யில். “என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் அவர் தனது ஆசன வாயில் பாட்டிலை செருகும்போது அது மலக்குடலில் நுழைந்துள்ளது. அதை அவரால் எடுக்க முடியவில்லை. இந்த விஷயத்தை அவர் தனது குடும்பத்தி னரிடம் தெரிவிக்கவில்லை. மருத்துவமனைக்கு வந்த அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தாமல் அறுவைச் சிகிச்சை செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் கண்ணாடி பாட்டில் உடைந்தால் அது கடுமையான உள் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என அறுவைச் சிகிச்சை நிபுணர் கூறினார். எனவே நாங்கள் உடனடியாக முதுகெலும்பு மயக்க மருந்து கொடுத்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து பாட்டிலை அகற்றினோம் என்றார்.