டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் கண்காட்சி மல்யுத்த விளையாட்டு போட்டியின் நட்சத்திர வீராங்கனையான சாரா லீ திடீரென மரணமடைந்துள்ளதாக அவரது தாயார் டெர்ரி லீ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். முதல் கட்டமாக சாரா லீ சைனஸ் பிரச்சனை காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 30 வயதாகும் சாரா லீ-க்கு மல்யுத்தம், உடல்நலன், உடற்பயிற்சி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். முக்கியமாக மிக கடினமான உடற்பயிற்சியில் (ஹார்ட் ஜிம்) பிசியாக இருக்கும் சாரா லீ கடைசியாக 2 நாட்களுக்கு முன்னர் கூட தனது இன்ஸ்டாகிராமில்,”இறுதியாக 2 நாட்கள் தொடர்ச்சியாக ஜிம்மிற்குச் செல்லும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதைக் கொண்டாடுகிறேன். முதன்முறையாக சைனஸ் தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என பதிவிட்டு இருந்தார். சாரா லீயின் திடீர் மரணம் மல்யுத்த உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரா லீ-க்கு கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.