what-they-told

img

மனித நடத்தையை மாற்றும் ஈயின் படம் -சிதம்பரம் இரவிச்சந்திரன்

தூய்மையான ஒரு பொது கழிப் ப்பறையில் சிறுநீர் கழிக்கும் பகுதியில் ஆணான நீங்கள் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.வெள்ளைவெளே ரென்று பளபளப்புடன் இருக்கும் பீங்கான் கிண்ணத்தில் ஒரு ஈ உட்கார்ந்திருக்கிறது என்றால் அதை விரட்டிவிடுவீர்களா அல்லது அந்த ஈயின் மேல் சிறுநீர் கழிக்க முயற்சி செய்வீர்களா? சிறிய வயதில் பலவகையாக சிறுநீர் கழித்த ஞாபகம் இல்லையென்றாலும் பெரும்பாலான ஆண்கள் நின்றுகொண்டு அந்த ஈயைக் குறிக்கோளாக வைத்து அதன் மீதே சிறுநீர் கழிப்பர். ஈக்களு டன் உள்ள அருவருப்பும், பயமின்மை யுமே மனிதர்களின் இந்தப் போக்கிற்குக் காரணம். பல பொதுக்கழிப்பறைகளிலும் ஆண்கள் தவறான இடத்தில் கவனக் குறைவுடன் சிறுநீர் கழிப்பதால் அது தெறித்து கிண்ணத்திற்கு வெளியில் செல்கிறது. இதனால் தரையும் சுவரும் கிண்ணத் தின் வெளிப்பகுதியும் தூய்மைக்கேடு அடைகிறது. இதைச் சுத்தப்படுத்த அதிக உழைப்பு தேவைப்படுகிறது. அதிகச் செலவு ஏற்படுகிறது.

1990 தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் ஸ்கிஃபால் (Schiphol) விமானநிலை யத்தில் சுத்தப்படுத்தும் பிரிவில் இருந்த ஜோன்ஸ் வான் ஃபெடாஃப் என்பவர் சிறுநீர் கழிக்கும் கிண்ணத்தில் சிறிய ஈக்களின் படத்தைப் பதிக்கும் கருத்தை முதல்முறையாக செயல்படுத்தினார். ஒரு கறுப்புப்பொட்டு வைக்கப்பட்ட கிண்ணங்கள் பொட்டு இல்லாத மற்ற வற்றை விட தூய்மையாக இருப்பதை அவர் ராணுவத்தில் பணி புரிந்தபோது கவனித்தார். இதை அவர் விமான நிலை  யத்தில் செயல்படுத்தினார். ஈயின் படம் பதிக்கப்பட்ட இடங்கள் மற்ற இடங்களை விட சுத்தமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இத னால் தூய்மைப்பணிகளுக்கு ஆகும் செலவில் 8 சதவிகிதத்தைக் குறைக்க முடிந்தது. மனிதர்களுக்கு மற்ற சிறிய உயிரினங்கள் மீது சிறுநீர் கழிப்பது பிடித்த மான ஒன்று. மனிதர்களுக்கு ஈக்களுடன் பொதுவாக ஒரு அருவருப்பு மனோபாவம் உள்ளது. அவற்றிடம் பயமும் குறைவு. குளவி, வண்டு, சிலந்தி போன்றவற்றுடன் இருப்பது போல ஈக்களிடம் பயம் இல்லை. கழிப்பறைகளில் ஈக்கள் வர வாய்ப்பு உள்ளதால் பதிக்கப்படும் படங்கள் உண்மையான ஈதான் என்று பலர் நம்புகின்றனர். இதனால் அதன் உடல் மீது சிறுநீர் கழிக்க முயலும்போது சரியான இடத்தில் அது கழிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த யுக்தி பல விமான நிலையங்கள், விளையாட்டு அரங்குகள், கல்விக்கூடங்களில் பயன் பாட்டிற்கு வந்தது.

கழிப்பறையில்  தேனீக்களின் படம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் பல சிறுநீர் கழிக்கும் பொது இடங்களில் தேனீக்களின் படங்கள் பதிக்கப்பட்டன. தேனீக்கள் அபிஸ் (Apis) என்ற பூச்சிகள் இனத்தைச் சேர்ந்தவை. அபிஸ் என்பது நாளடைவில் சுருங்கி சிறுநீர் கழிப்பதை பிஸ் (piss)என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பொறி யியலாளரும், தொழிலதிபருமான தாமஸ் க்ராக்கர் என்பவர் தேனீக்கள் படம் பதிக்கப்பட்ட கழிப்பறைக் கிண்ணங் களை தொழில்ரீதியாக உற்பத்தி செய்து நடைமுறைக்குக் கொண்டுவந்தார். தயாரிப்பின்போது பீங்கானில் சூடுபடுத்தி ஒட்டும் ஒட்டிகள் (stickers) பதிக்கப்பட்ட கிண்ணங்களை பல நிறு வனங்கள் உற்பத்தி செய்து வெளியிட் டன. சிறுநீரின் சூடு படும்போது மங்கி மறைந்து காணாமல் போகும் படம் மீண்டும் பழையநிலைக்கு வரும்வகை யில் உருவாக்கப்பட்ட வெப்ப உணர் தன்மையுடைய (thermal sensor) ஒட்டிகள் வெளிவந்தன.

நட்ஜ் என்னும் நடத்தைக் கோட்பாடு

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நடத்தை உளவியல் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலர் (Richard thaler) மற்றும் சட்ட நிபுணர் காஸ் சன்ஸ்டைன் (Cass Sunstein) இணைந்து 2008ல் நட்ஜ் என்ற நடத்தை உளவியல் தொடர்பான (Nudge- improving decisions about health and happiness) என்ற நூலை வெளியிட்டனர். கட்டாயப்படுத்தாமல் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களை சில பழக்கவழக்கங்கள் மூலம் முடிவெடுக்க, செயல்படுத்த வைக்கமுடியும் என்பதே நட்ஜ் கோட்பாடு. இக்கோட்பாடு அமெரிக்கா, இங்கி லாந்தில் அரசியல்வாதிகள் மற்றும் பொது சுகாதாரத்துறையிலும் பெரும் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஏற் படுத்தியது. இது சுகாதாரத்துறை, இயற்கைப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பயன்படுத்தப் படுகிறது. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத் தில் ஈயின் மீது சிறுநீர் கழிக்கவேண்டும் என்று எவரிடமும் வற்புறுத்தப்பட வில்லை என்றாலும் பெரும்பாலோரும் அவர்களின் பழக்கத்தினால் அதைப் பின்பற்றினர். இக்கோட்பாட்டின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. 2017ல் பொருளாதாரத்துறைக்கான நோபல் விருது ரிச்சர்ட் தாலருக்கு வழங்கப்பட்டது. வீட்டுச்சாப்பாடு, இயற்கை உணவு போன்ற அறிவிப்புப் பலகைகள் இக்கோட்பாட்டிற்கு சில எடுத்துக்காட்டுகள். உணவகங்களில் மெனு கார்டில் விலையுயர்ந்த உணவு வகைகள் முதலில் இடம்பெற்றிருப் பதைப் பார்க்கலாம். அது நாம் அவற்றை வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக இல்லை. அவற்றிற்குக் கீழ் குறைந்த விலை யுடைய உணவுவகைகள் பட்டியலிடப் பட்டிருக்கும். அப்போது அதிக விலையுள் ளவை கூட விலை குறைந்தவையே என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். விலையுயர்ந்த வற்றை வாங்கிச் சாப்பிட நம்மைத் தூண்டுவதே இதன் பின்னால் இருக்கும் நட்ஜ் தந்திரம். சில அடையாளப்பலகைகள், பெரிய வணிக நிறுவனங்களில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் சாதனங்களின் அமைப்பு உட்பட பல சந்தர்ப்பங்களில் நட்ஜ் கோட் பாட்டிற்கு அடிப்படையான மனித நடத்தை உளவியல் முறைகளே பின்பற்ற ப்படுகின்றன.