weather

img

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு-புயலுக்கு ஜவாத் என்று பெயர் சூட்டிய சவுதி

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 960 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவில் இருந்து 1060 கிலோ மீட்டர் தெற்கு தென் கிழக்கு திசையிலும் தற்போது நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்படும். இது சவுதி அரேபியாவால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும்.