weather

img

தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்

புதுதில்லி,நவம்பர்.25- தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தமிழ்நாடு - இலங்கையை நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.