weather

img

தீவிர புயலாக வலுப்பெறுகிறது ‘நிவர்’

சென்னை;
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில்  தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது.அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற இருக்கிறது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல் பட்டு, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியின் பகுதிகளில் ஓரிரு இடங் களில் அதி கனமழையும், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இந்தப் புயலால் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர்  வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.அதேபோல் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் 24, 25 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக் கால் துறைமுகங்களில் 3வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.இராமநாதபுரம், நாகை, சீர்காழி, புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பாதுகாப்பு வளையத்தில் கடலூர்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25 ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக் கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புயலினால் எப்போதும் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு!
‘நிவர்’ தீவிரப் புயலாக கரையைக் கடக்கும பட்சத்தில் மணிக்கு 89 கி.மீ. முதல் 117 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளில் ஈடுபட கடலூர் மாவட்ட ஆட்சியரின் அழைப்பை ஏற்று அரக்கோணம் அருகே நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தலா 20 பேர் கொண்ட 6 குழுக்கள் அரக்கோணத் தில் இருந்து கடலூரை வந்தடைந்தனர்.இக்குழுவினர் தங்களுடன் ஆர்வமுள்ள பகுதிகளிலும் நீந்திச் செல்ல தேவையான, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக் கும் மரங்களை அகற்ற தேவையான அதிநவீன கருவிகள் மற்றும் நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்ல தேவையான படகுகள் ஆகியவற்றுடன் மேலும் மக்களின் உயிர்காக்க தேவையான மருத்துவக் குழுவினரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

;