weather

img

இடி மின்னலுடன் கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை....

சென்னை:
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.இதன் காரணமாக திங்களன்று(டிச.7) ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட் டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு- மாலத்தீவு, கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;