technology

img

3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை! : காரணம் இதுதான்....

44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 
யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 38 லட்சம் வீடியோக்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த 3 மாதங்களில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.