technology

img

சந்திரயான் -3 வெற்றி: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் உலா வருகிறது. இந்த வெற்றியை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.

கூகுள் குரோம் மற்றும் கூகுள் வெப் பிரவுசர்கள் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சந்திரயான் – 3 மிஷனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.இது ஜிஃப் (GIF) வடிவத்தில் இயங்குகிறது.அதில் கண்களை மூடிக்கொண்டு இருக்கும் நிலவை சுற்றி சந்திரயான் வலம் வருகிறது. தொடர்ந்து லேண்டர் அதில் தரையிறங்கி, அதிலிருந்து ரோவர் பிரிவது போல் இந்த டூடுல் ஜிஃப் உருவாக்கப்பட்டுள்ளது.அதோடு கூகுள் டூடுல் பக்கத்தில் சந்திரயான் -3 மிஷனின் முழுப் பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.