technology

img

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்!

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்கள் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரையும் பிரதமர் மோடி வாழ்த்தி அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைச் சந்தித்து நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

;