கலிபோர்னியா
உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனர் தென் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரின் 9.2% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் டுவிட்டரின் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைவார் கடந்த வராத்திலிருந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர் இணையப்போவதில்லை என டுவிட்டரி்ன் தலைமை செயல் அலுவலர் பாரக் அகர்வால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில்,"ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் எலான் மஸ்க் நிர்வாக குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக செயல்படவிருந்தார். ஆனால் அதே நாள் காலை நிர்வாக குழுவில் இணைய போவதில்லை என அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த முடிவு நல்லதுக்கு என நான் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் வரவேற்பு
டுவிட்டரின் மிக பெரிய பங்குதாரரான எலானின் யோசனைகளை தொடர்ந்து வரவேற்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். அடுத்து என்ன செய்வார், எப்படி நடந்து கொள்வார் என சற்றும் கணிக்க முடியாத நபராக இருப்பவர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.