technology

img

பெண்கள் உடல்நலம் கருதி புதிய ஸ்மார்ட் வாச் அறிமுகம் - கார்மின் 

பெண்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு கார்மன் நிறுவனம் லிலி என்ற புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது.

கார்மின் கனெக்ட் ஆப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் கர்ப்பம் சார்ந்த அறிகுறிகள், குழந்தைகளின் அசைவு, உள்ளிட்ட தரவுகளைப் பதிவேற்றம் செய்து கண்காணித்து கொள்ளலாம். மேலும் உடற்பயிற்சி குறிப்புகளை லிலி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெற்று கொள்ளலாம்.

இது குறித்து கார்மின் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் வெளிட்ட அறிக்கையில் 
எங்களது புதிய ஸ்மார்ட் வாட்ச் மூலம் மேலும் நிறைய பெண் பயனாளர்கள் இதில் பயன் பெறுவார்கள் என்றும், அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நலமாக வாழ இந்த ஸ்மார்ட் வாட்ச் பயன்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லிலி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெண்கள் நலம் சார்ந்த அம்சங்களை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் இதன் விலை ரூ.20,990 ஆகும்


 

;