tamilnadu

img

கொரோனா காலத்திலும் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஜூலை 21- கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும் அரசுப் பணிகளைச் செய்ய லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவல ரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் கிரா மத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்ப வர் சசிக்குமார். இவர் கிராமத்திற்கு வருவதே கிடையாது. தனது நண்பர்கள் மூலம் அரசு பணிகளை செய்கிறார். அவர்கள் மூலமாகவே லஞ்சம் பெற்றுக் கொள்கிறார். லஞ்சம் கொடுப்பவர்கள், கொடுக்காதவர்கள் என பாகுபாடு காட்டுகி றார் என அந்த கிராம மக்கள் தொடர்ந்து குற்றம்சாற்றி வருகின்றனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்  கிராமத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும், தொலைப்பேசியில் தொடர்புகொண்டால் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் பெரும்பாக்கம் கிளை  சார்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அரு கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச்செயலாளர் எஸ்.பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.மாசிலாமணி, எஸ்.ராஜா, வட்டக்குழு உறுப்பினர் அர்ஜூன்குமார் ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலை வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்பதாகவும் உறுதி அளித்தார்.

;