tamilnadu

img

அம்பேத்கர் கல்வி மையம் சார்பில் திருவள்ளுவர் தினம்

செங்கல்பட்டு, ஜன. 16- செங்கல்பட்டு அருகே திம்மாவரத்தில் அம்பேத்கர் கல்வி மையம்  சார்பில் திரு வள்ளுவர் தின விழா  நடைபெற்றது. திருக்குறளை இயற்றிய பெருந்தகை யான திருவள்ளுவருக்கு விழா  உலகெங்கும்  வியாழனன்று (ஜன. 16)  கொண்டாடப் பட்டது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டில்  அம்பேத்கர் கல்வி  மையத்தின் சார்பில்  புதிய பேருந்து நிலையம் அருகே திரு வள்ளுவர் தினம் தலைவர் அ.ராமலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அவருக்கு  புகழ் அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டது. திரு வள்ளுவரை வாழ்த்தி திருக்குறள் பாடப் பட்டது. மேலும் 1,330 திருக்குறளை ஒப்பு வித்து தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற இரா.பீனா பிரீத்தி, நவீஸ் ரோஷன், பி. லோகேஷ், நரேன் கார்த்திக் ஆகிய சிறு வர்கள் கவுரவிக்கப்பட்டனர். திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன.  இதில்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலை வர் கந்தசாமி, மாவட்டச் செயலாளர் வாசு தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் இ.சங்கர்,  நிர்வாகி கள் ம.மேகநாதன், க.தனசேகரன், நா.அரு ணாச்சலம், ஓ.செல்வமணி, வி.கணபதி,  உள்ளிட்ட பலர் பங்கேற்று திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்தும், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிமுறை மற்றும்  அறம் குறித்தும் பேசினர்.

;