tamilnadu

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கு ரூ.1000 நிவாரணம்

செங்கல்பட்டு, ஜூன் 23- ஊரடங்கு நிவாரணமாக அரசு அறி வித்துள்ள 1000 ரூபாயை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வழங்க  வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவுகி றது. இதனை தடுக்க, சென்னையில் முழுமை யாகவும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊர டங்கு அமலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு  அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு நகராட்சி, மறைமலை நகர்  நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூ ராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் முழு ஊர டங்கு அமலில் உள்ளது. இவர்களுக்கு அரசு  அறிவித்த 1000 ரூபாய் நிவாரணம் கிடைக்கும்.

அதேசமயம், மதுராந்தகம், செய்யூர், திருக்  கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட வட்டங்களில் வசிக்கும் மக்கள் எங்கும் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. பணிக்குச்  செல்பவர்களின் வாகனங்களும் பறிமுதல்  செய்யப்படுகிறது. குறிப்பாகக் கட்டுமான  பணிகள், முறைசாரா பணியாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான தொழிற்சாலைகள், கட்டு மானப் பணிகள் செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலேயே இருக்கிறது. பொதுபோக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழி லாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு  அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவார ணத்தை, மாவட்டம் முழுவதும் உள்ள குடும்ப  அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டும் என  பொதுமக்கள் கோருகின்றனர். இதுகுறித்த கோரிக்கை மனுவை  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயி சிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டச் செய லாளர் க.புருஷோத்தமன்,  அளித்துள்ளார்.

;