tamilnadu

img

ஜின்பிங்-மோடி கைகுலுக்கும் கற்சிற்பம் இருவருக்கும் அனுப்பப்படும் மாமல்லபுரம் பொதுமக்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு, அக். 12- சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்திய பிரதமர்  மோடி ஆகியோர் கைகுலுக்கும் கற்சிற் பத்தை இருத்தலைவர்களுக்கும் மாமல்ல புரம் மக்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்  படுத்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய  பிரதமர் மோடியும் அக்.11-12 தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பை நினைவுபடுத்தும் வகையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் கைகுலுக்குவது போன்ற கற்சிற்பம் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். 2 அடி உயரம் 2 அடி அகலத்தில் சிற்பி  பசுலுதீன் என்பவர் செதுக்கிய அந்த சிற்பம்,  மாமல்லபுரம் பொதுமக்கள் சார்பில் இரு  நாட்டு தலைவர்களுக்கும் அனுப்பி வைக்  கப்பட உள்ளது. 12 கிலோ எடையுள்ள இந்த  சிற்பத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுச் செய்திருப்பதாகவும், ஆட்சியர் மூலமாகவே இருத் தலை வர்களுக்கும் அனுப்பிவைக்க இருப்பதாக வும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.