tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

டிச.23-ல் குடியரசுத் தலைவர் புதுச்சேரிக்கு வருகை
புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ-ாணவிகளுக்கு பட்டங்களை வழங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 23 அன்று புதுச்சேரிக்கு வருகிறார்.காலாப்பட்டில் அமைந்துள்ள  புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.பல்கலைக்கழக 27-வது பட்டமளிப்பு விழா டிசம்பர்  23 திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக ஜவகர்லால் நேருகலையரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுகுடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

மதுரை-மும்பை விமானம் பத்து நாட்களாக முடக்கம்
மதுரை:

மதுரையிலிருந்து மும்பை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடந்த பத்து நாட்களாக இயக்கா மல் மத்திய அரசு முடக்கிவைத்துள்ளது. இதனால் வர்த்தகர்கள், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்குப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்? 
புதுதில்லி:

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் பிப்ரவரி முதல் தேதியன்று 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக ஜனவரி 31 அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கலின்போது வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்படும். அதில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில்  நிலநடுக்கம்
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சனிக்கிழமையன்று காலை 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் சனிக்கிழமையன்று  காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பிரதமர்  தலைமையில் கங்கை நதி மேலாண்மை கூட்டம்
கான்பூர்:

கங்கை நதி மேலாண்மை தொடர்பானமுதல் கவுன்சில்  கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 14 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில்மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

;