tamilnadu

img

காஷ்மீரில் நிலவும் மருத்துவ நெருக்கடி... நோயாளிகளின் துயரத்தை பேசிய அரசு மருத்துவர் கைது

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநில ஊரடங்குத் தடைகளால், அங்கு மருத்துவ நெருக்கடி மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வரும் நிலையில், அதுபற்றி, வெளிப்படையாக கருத்து தெரிவித்ததற்காக, அங்குள்ள அரசு மருத்துவர் ஒருவரையும் காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தொலைத் தொடர்புமற்றும் இணையதள வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவன ங்கள் மூடப்பட்டுள்ளன. கடும் சோத னைக்குப் பிறகே- அதுவும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, காஷ்மீர் நோயாளிகள் அனுபவிக் கும் துயரத்தை சகித்துக் கொள்ள முடியாத, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் உமர் சலீம், வெளிப் படையாக அதுபற்றி பேசியுள்ளார்.ஸ்ரீநகர் பத்திரிகையாளர் அரங்கத்தில், “இது வேண்டுகோள் - போராட்டம் அல்ல” என்று எழுதப்பட்ட அட்டையைக் கையில் பிடித்தபடி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில்தான் தனது மனக்குமுறல்களை அவர் கொட்டி யுள்ளார். “தகவல் தடுப்பு மற்றும் பயணத்தடை காரணமாக, நோயாளிகள் பலரின் வாழ்க்கை ஆபத்தாக மாறியுள்ளது. குறிப்பாக, டயாலிசிஸ் மற்றும்கீமோதெரபி சிகிச்சையாளர்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை யால் எத்தனை நோயாளிகள் உயிரிழந் தார்கள்; எத்தனை பேருக்கு உடனடியாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டன என்பது சரியாக தெரியவில்லை. என் நோயாளி ஒருவருக்கு, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்தது. ஆனால், தடைகள் காரணமாக அவரால் வர முடியவில்லை. அதன்பிறகு அவர் ஆகஸ்ட் 24-ஆம் தேதி சிகிச்சைக்கு வந்தார். ஆனால், கீமோதெரபிக்கான மருந்துகள் கிடைக்கவில்லை.மற்றொரு நோயாளிக்கு, தில்லியி லிருந்து மருந்து வாங்க வேண்டிய நிலை.ஆனால், அந்த மருந்தை வாங்க முடியவில்லை. இதனால் அவருக்கான சிகிச்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோல வாரவாரம் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நோயாளிகள் பலர், இந்த தடை காரண மாக, பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தில் அதிகமானவர்கள் இணைந்த மாநிலத்தில் காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதால், அடையாள அட்டை மூலம் நோயாளிகளால் எவ்வித சிகிச்சையும் பெறமுடியவில்லை. இதைப்போல வேறுபல காப்பீட்டுத் திட்டங்களில் இணைந் திருப்பவர்களும் சிகிச்சை பெற முடியாமல் கஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.” என்று சலீம் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, உமர் சலீம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார், உடனடியாக அவரைக் கைது செய்து அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.

;