tamilnadu

வேலூர் நேதாஜி காய்கறி சந்தை மீண்டும் மூடல்

வேலூர், ஜூன் 13- கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வேலூர் பழைய பேருந்து  நிலையம் அருகில் செயல்பட்டு வந்த நேதாஜி  காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பேருந்து நிலையம், டோல்கேட் பகுதி  உழவர்சந்தை, தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது. மொத்த காய்கறி விற் பனை நேதாஜி மார்க்கெட் பகுதியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நடை பெற்று வந்தது. நோய்த்தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக வாரத்தில் 3 நாட்கள் திறக்கப்பட்ட  மளிகை கடைகள், காய்கறி கடைகள் தினசரி திறக்கப்பட்டன. தற்போது மண்டித் தெருவில் செயல்பட்டு  வந்த அரிசி வியாபாரிக்கும், அவரது குடும்பத்  தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, மொத்த வணிகர்கள், பல சரக்கு கடை வியாபாரிகள்,  பூக்கடை வியா பாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (மாவட்ட ஆட்சி யர் பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.  இதில் மண்டித் தெருவில் செயல்பட்டுவந்த அரிசி, மளிகை பொருட்கள் மொத்த மற்றும்  சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் நேதாஜி காய்கறி மார்க்கெட், சாரதி மாளிகை,  பழைய மீன் மார்க்கெட் ஆகியவற்றை மூடுவதென முடிவு செய்யப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14)  முதல் காய்கறி மார்க்கெட்டை அண்ணா சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திற்கு மாற்றுவது என்றும், ஏற்க னவே செயல்பட்டு வந்த காய்கறி சந்தை கள் அப்படியே செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மொத்த காய்கறிகள் விற்பனை மட்டும் நேதாஜி மார்க்கெட்டில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இயங்குவது என  முடிவு செய்யப்பட்டது. கடந்த மே 31 வரை வேலூர் மாவட்டத்தில் 43 நோயாளிகள்தான் இருந்தனர். ஆனால் கடந்த 13 நாட்களில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் சென்னையில் இருந்து வந்த வர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;