வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கோடை முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ.ராமன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.பாலாஜி, மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன், காட்பாடி ரெட்கிராஸ் சங்க கிளைச் செயலாளர் ஜனார்த்தனன், முதல்நிலை நூலகர் இரா.பழனி ஆகியோர் உனிருந்தனர்.