வேலூர், ஆக. 3- வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ஊராட்சியில் உள்ள கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றன. தற்போது கிராமத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. எனவே கிரா மத்தில் உள்ள குளங்களை தூர்வாரி நீர் ஆதா ரத்தை பெருக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி செய லரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்க ளன்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரிபிரபுவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.