வேலூர், அக். 25- வேலூரில் இருந்து சென்னைக்கு இரு குளிர்சாதன அரசுப் பேருந்துகளின் சேவைகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இப்பேருந்துகளை வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கொடி யசைத்து தொடக்கி வைத்தார். ஏற்கெனவே மார்ச் மாதம் முதல் ஒரு குளிர்சாதனப் பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக இரு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகளில் வேலூரில் இருந்து சென்னை செல்ல ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த குளிர்சாதனப் பேருந்துகளில் ரூ.160 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரி வித்தனர். மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், ஆவின் தலை வர் த.வேலழகன், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக துணைப் பொது மேலாளர்கள் கலைச்செல்வன் (இயக் கம்), ஈஸ்வரன் (பணிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.