tamilnadu

img

ரஜினி தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

சென்னை, ஜன. 23- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து முதல் முதலாக வைக்கத்தில் போராடி வெற்றி கண்ட ‘வைக்கம் வீரர்’ பெரியாரின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதால்தான் மகாராஷ்டிர மாநி லத்தில் கோயில் நுழையும் போராட்டத்தைத் தான் நடத்த  முடிந்தது” என்று உரக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர் என்பது வரலாறு. சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச்  சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்த வர் பெரியார். பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர்  விடுதலையைச் சாதித்தவர் பெரியார்.

தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலு டன் இரண்டறக் கலந்து இருக்கின்ற தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த், கூறிய கருத்துக்களை திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரப் பூர்வமாக மறுத்து இருக்கின்றார். அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே! தொடங்கி வைத்தது ரஜினி காந்த். அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

;