tamilnadu

img

சிபிஎஸ்இ பாடங்களில் திட்டமிட்டு முக்கிய பாடப்பகுதிகள் நீக்கம்: வைகோ

சென்னை:
30 % பாடச்சுமை குறைப்பு என்கிற பெயரில் சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசிய(Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள் ளன என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

“கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை30 சதவீதம் குறைப்பதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்திருக்கிறது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டார். மேலும் சிபிஎஸ்இ இயக்குநரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்புத் தொடர்பாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல்  பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி குடியுரிமை தேசியம்  மற்றும் மதச் சார் பின்மை  ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது.பாடத்திட்டம் குறைப்பு எனும் பெயரில் பாஜக அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங் களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பாஜக அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பாஜக தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.