tamilnadu

img

சொத்து வரி குறைப்பு: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, நவ. 20- உள்ளாட்சித் தேர்தலுக்காக சொத்து வரி  உயர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களும், திமுகவினரும் வெகுண்டெழுந்து போராடிய போதும் திரும்பப் பெறப்படாத வரி உயர்வு, தேர்த லுக்காக திரும்பப் பெறப்பட்டுள் ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் உயர்த்தி வசூலிக்கப்பட்ட வரியை, காசோலையாகவோ, ரொக்க மாகவோ மக்களுக்கு உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என கோரி யுள்ள ஸ்டாலின், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூ ராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை, முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.