tamilnadu

img

மின்சாரம் தாக்கி  கூலித் தொழிலாளி பலி

 வேலூர்,செப்.23- மின் விசிறியை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழியாத்தம் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த தீனதயாளன்(52) கூலித்தொழிலாளி.இவர், தன்வீட்டில் மின் விசிறி போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதில் மயக்கமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. அங்கு மருத்துவர் அவரை சோசித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். பலியான தீனதயாளனுக்கு, கங்கா என்ற மனைவியும், யோகேஷ்வரன் என்ற மகனும், சவிதா என்ற மகளும் உள்ளனர்.இது பற்றி குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.