tamilnadu

காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3,189 டன் உரம் வருகை

வேலூர், ஏப்.28- ஓமன் நாட்டிலிருந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திற்கு உர மூட்டைகள் வந்தன. அங்கிருந்து, வேலூர் உள்பட மூன்று மாவட்டங்களுக்கு தேவையான, 3,189 டன் இப்கோ யூரியா உர மூட்டைகள், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. உதவி வேளாண்மை இயக்குநர் சுஜாதா, கள அலுவலர்ஆனந்தன் கொண்ட குழுவினர் உர மூட்டைகளை, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், 'ஓமன் நாட்டிலிருந்து, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தேவையான, 3,189 டன் இப்கோ யூரியா உரம் மூட்டைகள் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்திற்கு,2,500 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 600 டன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 89 டன்உரம், லாரிகள் மூலமாகஅனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த உர மூட்டைகள், வரும் காரீப்பருவ நெல் பயிர் சாகுபடிக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள வேளாண்மை கூட்டுறவு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்பவிவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

;