tamilnadu

img

பிரபல மல்யுத்த வீரர் ஷாட் காஸ்பார்ட் கடலில் மூழ்கி மரணம்.....  

வாஷிங்டன்
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல கண்காட்சி மல்யுத்த போட்டி தொடரான டபிள்யு. டபிள்யு.இ (WWE) தொடரின் நட்சத்திர வீரரான ஷாட் காஸ்பார்ட் (39) 2008 முதல் 2010-ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்தி பின்னர் சினிமா துறைக்கு திரும்பினார். அதன் பின் எழுத்தாளர் துறையில் காலடி வைத்து நாவல் எழுதினார்.  

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வெனிஸ் கடற்கரைக்கு காஸ்பார்ட் தனது மகனுடன் (10) பொழுதைக் கழிக்கச் சென்றுள்ளார்.இருவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென கடல் அலைகள் 6 அடி உயரத்திற்குச் சீற்றமடைந்தன. ஒரு ராட்சத அலையில் காஸ்பார்ட்டும், அவரது மகன் சிக்கினர். அங்கிருந்த கடற்கரை பாதுகாவலர்கள், இருவர்களையும் காப்பாற்றப் போராடினர்.

எனினும் ஷாட் காஸ்பார்ட் தனது மகனை முதலில் மீட்கச் சொல்லினார். கடற்கரை பாதுகாவலர்கள் மகனை முதலில் மீட்டனர். ஆனால் அதற்குள் காஸ்பார்ட் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  பின்னர் 17 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு  உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தன் மகனைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த  ஷாட் காஸ்பார்ட் பற்றிய செய்தி அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;