tamilnadu

img

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா...  24 மணி நேரத்தில் 1,200 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்
ஐரோப்பாவை புரட்டியெடுத்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் நவீன மருத்துவத்திற்குப் பெயர் பெற்ற அமெரிக்கா செய்வதறியாது திணறி வருகிறது. கடும் கட்டுப்பாடுகள் இருந்தும் அங்குத்  தினமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்படுகிறார்கள். 

இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1200 பேர் பலியாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய காலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 9,600 ஆக உயர்ந்துள்ளது.  
 

;