செஞ்சி கோட்டை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டதற்கு சிபிஎம் வரவேற்பை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது.
இந்தியாவில் 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அங்கீகாரத்தை சிபிஐ(எம்) வரவேற்கிறது. தமிழ்நாட்டின் பண்பாட்டு பாரம்பரியமும், வரலாற்று சிறப்பும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் உலக அங்கீகாரத்திற்கு ஏற்ப செஞ்சி கோட்டை பாதுகாக்கப்படவும், மேம்படுத்தப்படவும் வேண்டும். என பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளார்