tamilnadu

img

வீடுகள் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் வேலை, வருமானமிழந்த குடும்பங்களை பாதுகாத்திட, மத்திய அரசு ரூ.7500 நிவாரணம் கோரி  விவ சாயத் தொழிலாளர்கள் வீடுகள் முன்பும்  வீதிகளிலும் சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்தினர்.

சிஐடியு, அகில இந்திய விவசாயி கள் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய  அமைப்பு களோடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து போராட்டம் மேற் கொள்ளப்பட்டது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்பு ரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட் டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கமிட்ட னர்.

சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் நாகை மாவட்டம் வாட்டாக்குடியிலும், மாநில பொருளாளர் எஸ்.சங்கர் புதுக் கோட்டை மாவட்டம் பழையகந்தர்வ கோட்டையிலும், மாநிலச் செயலா ளர்கள் எம்.சின்னதுரை புதுக்கோட்டை புனல் குளத்திலும், அ.பழநிசாமி திருச்சி பண்புஅறம்சுற்றியிலும், ஏ.வி.அண்ணா மலை தேனி மாவட்டம் கம்பத்திலும் பங் கேற்றனர் என்று  விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

;