திருக்கோவிலூர்,நவ.24- திருக்கோவிலூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனார் புடைப்புச் சிற்பம் கண்டறிய ப்பட்டது. திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை யில் அமைந்துள்ள ஆஞ்ச நேயர் கோயில் அருகே செல்லும் கால்வாயை சீர மைத்தபோது, அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட கல் பலகைகளை அண்மையில் அகற்றினர். அதில், புடைப்புச் சிற்பம் உள்ள கல் பலகை ஒன்று கண்டெடுக்க ப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தி னர், அதன் தலைவர் சிங்கார.உதியன், கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், பிச்சைப்பிள்ளை, நூலகர் அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்த னர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மண லூர்பேட்டையில் கண்டெடு க்கப்பட்ட சிற்பம் பிச்சாடனார் உருவமுள்ள புடைப்புச் சிற்பமாகும். அதன் உருவ அமைப்பானது, தலையில் விரிசடையும், காதில் பத்திர குண்டலமும், கழுத்தில் சரவணி சவடி, ஆரம் போன்ற அணிகலன்களும் உள்ளன. நான்கு கரங்களில் மேல் கரத்தில் வாகு வலயங்க ளும், முன் கரங்களில் காப்பும் உள்ளன. மேல் வலக்கரத்தில் உடுக்கையும், இடக்கரத்தில் சூலமானது கழுத்துக்கு பின்பக்கமாக காணப்படு கின்றன. பிச்சை புகும் பெரு மான் என்ற சிவபெருமானின் ஒரு அம்சமாக கருதப்படும் இந்த பிச்சாடனார் எப்போதும் ஆடைகளின்றி நிர்வாணமாகவே காணப்படு வார். சிற்பத்தின் முன் கரத்தின் கீழ், இடது பக்கத்தில் பூதகணம் செல்வ பாத்திரத்தை ஏந்திய நிலையில் உள்ளது. வலக்க ரத்தின் கீழ் காட்டப்பட்டுள்ள முன்கால் தரையிலும், பின்கால் தரைக்கு மேல் உயர்த்தியும், வாயில் புல் தின்பது போலவும் உள்ளன. பிச்சாடனார் சிற்பம் இடதுகால் நேராகவும், வலது கால் மடிந்த நிலையி லும் காட்டப்பட்டுள்ளன. இந்த நிலையை துவிபங்க நிலை என்பார்கள். பீடத்தில் நிற்பதுபோல் பிச்சாடனா ரும், இடப்புறம் பூதகணமும் காட்டப்பட்டுள்ளன. பூதகணம் காதில் குண்டலம், கழுத்தில் பட்டையான ஆபர ணம், அரையாடையுடன் காட்டப்பட்டுள்ளது. இந்த பிச்சாடனார் சிற்பம் 10 -11ஆம் நூற்றாண்டின் கலையைப் பெற்றுள்ளது. இச்சிற்பம் சிறியதாயினும், அழகு மிகுந்ததாகக் காணப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மண லூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து வரலாற்று ஆவ ணங்கள் கிடைத்து வருவ தால், இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்தால், வரலாற்று சிறப்புகளை மேலும் அறிய முடியும் என்று அவர்கள் கூறினர்.