tamilnadu

img

விருதுநகர் : 10 கர்ப்பிணிகள் உட்பட 145 பேருக்கு கொரோனா

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பத்து கர்ப்பிணிகள், வங்கி ஊழியர்கள் இருவர், போக்குவரத்து காவலர், மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர், விருதுநகர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் உள்ளிட்ட 145 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றிருப்பது  உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் படந்தால், மேட்டமலை, தென்றல்நகர், அரசபட்டி, சிவகாசி காவலர் குடியிருப்பு, வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம், குன்னூர் சுகாதார ஆய்வாளர், கூமாப்பட்டி, ஆலங்குளம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி, சிவகாமிபுரம் தெரு, அருப்புக்கோட்டை ராமசாமி கூடத் தெரு, வேலாயுதபுர பள்ளிக்கூடத்தெரு, அஜீஸ் நகர், பாரதிதாசன் தெரு, திருக்குமரன் நகர், சின்ன புளியம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கல்லூரணி, சொக்கலிங்கபுரம், பாலையம்பட்டி, கோவிலாங்குளம், விருதுநகர் அருகே உள்ள சின்னபேராலி, கன்னிசேரிபுதூர், ஓ.கோவில்பட்டி, ஆயுதப்படை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் ஒருவர், அல்லம்பட்டி, கருப்பசாமி நகர், மேலரதவீதி, பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர், பாண்டியன் நகர், சீதக்காதி தெரு, மேற்கு காவல் நிலைய குடியிருப்பு, சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், திருச்சுழி பச்சேரியைச் சேர்ந்த ஒருவர், சிவகாசி நாராணாபுரம், அண்ணா காலனி, நேருஜி நகர், பெல் ஹோட்டல் ஊழியர், வெம்பக்கோட்டை கரிசல் குளம்,  திருத்தங்கல் பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலருக்கும் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது

;