tamilnadu

குப்பைப் பிரச்சனை  சிபிஎம் பேச்சுவார்த்தை

விருதுநகர்:
திருவில்லிபுத்தூரில் அங்கன்வாடி, குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகள் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். ஆனால் ஆணையாளர் இடத்தைமாற்ற முடியாது. குப்பை கொட்டுவதை குறைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட நம்பி நாயுடு தெரு,கீழத்தெரு, கீழ புதுத்தெரு, வடபத்திர சன்னதி தெரு உள்ளிட்டபகுதிகளில் சேரும் குப்பைகளை சிவகாசி சாலையில் உள்ளநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம். தற்போது குப்பைகளை அங்கன்வாடி மையம்அருகே குழிகளைத் தோண்டி குப்பைகள் கொட்டப்பட்டன. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நகராட்சியிடம் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் திருமலை, நகர் செயலாளர் ஜெயக்குமார், பிச்சைக்கனி,அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகன், கூட்டுறவு சங்கதுணைத் தலைவர் முருகராஜ் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மேலாளர் பாபு சுகாதார ஆய்வாளர்கள் பழனி,குரு, சரவணன். ஜஹாங்கீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய ஆணையாளர் “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் சேகரித்து அங்கேயே குழிகள் தோண்டி மக்கும்குப்பைகளை உரமாக மாற்றி மக்களுக்கோ விவசாயிகளுக்கோ இலவசமாக வழங்குகிறோம் 33 வார்டுகளின் குப்பைகளையும் சேகரித்து குப்பைக் கிடங்கில் கொட்டுவது சாத்தியமில்லை. துர்நாற்றம் வந்தால், வேறு ஏதேனும்பிரச்சனைகள் இருந்தால் சரி செய்து தருகிறேன் என்றார்.