tamilnadu

img

விருதுநகரில் வேகமாக பரவும் கொரோனா...  இன்று  மேலும் 129 பேருக்கு பாதிப்பு... 

விருதுநகர்
தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரைக்கு அருகில் உள்ள தொழில்துறை மாவட்டமான விருதுநகரில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 100-யை தாண்டியுள்ள நிலையில்,  கடைசி 3 நாட்கள் தினசரி 200-யை கடந்தது அம்மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக நேற்று இதுவரை இல்லாத அளவில் 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு (மதிய நிலவரம் - மாவட்ட மருத்துவ செய்தியின்படி) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,700-யை தாண்டியுள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (மதிய நேரப்படி)    பற்றி துடிப்பான தகவல் எதுவும் இல்லை. 

;