tamilnadu

பருவமழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகள் கண்காணிப்பு

சேலம், செப். 13 - சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பதற்றமான பகுதி கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளை கண்காணித் திட மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ள தென மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவம ழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிக ளாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவி லான அனைத்து கிராமப் பகுதிகளையும் ஆய்வு செய்தி டவும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  

மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜென ரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட் போன்ற உபகர ணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடி கால் வசதியும் ஏற்படுத்திட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய  துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திட வேண் டும். குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் இம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன டியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.